புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Oct 2021 1:44 AM IST (Updated: 22 Oct 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

தேங்கி நிற்கும் கழிவுநீர் 

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் 62-வது வார்டு குமரன் தெரு, மாடர்ன் தெரு ஆகிய பகுதிகளில் மழைக் காலத்தில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே வீடுகளின் முன்பும், சாலைகளிலும் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ரவீந்திரநாத், மதுரை. 

குடிநீர் பிரச்சினை 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள சேரந்தை கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த குடிநீர் மையம் மூடிக்கிடக்கிறது. இதன் காரணமாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகவேல், ேசரந்தை. 

சாலை வேண்டும் 

மதுரை வந்தியூர் காமராஜர் தெரு, சி.எம்.நகரில் உள்ள சாலையானது குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடந்து கூட ெசல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, இங்கு சாலை அமைக்க வேண்டும். 
-மோகன், மதுரை.

அடிப்படை வசதிகள் தேவை 

விருதுநகர் மாவட்டம் சேடபட்டி ஒன்றியம் உத்தபுரம் ஊராட்சி பட்டாளம்மன் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இதுநாள் வரை செய்து கொடுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நலன்கருதி இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுமா? 
-பாண்டி, சேடபட்டி. 

சுகாதார சீர்கேடு 

சிவகங்கை மாவட்டம் குருந்தம்பட்டு ஊராட்சி சோமநாதபுரத்தில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை தூர்வாரிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-சுமதி, கல்லல். 

ஆபத்தான மின்கம்பங்கள் 

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு தினமும் பல்வேறு பணி நிமித்தமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள சில மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அது எப்போது சாய்ந்து விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான மின்கம்பங்களை அகற்ற வேண்டும். 
-பொதுமக்கள், விருதுநகர். 

குண்டும், குழியுமான சாலை 

மதுரை மாநகர் 23-வது வார்டு புது விளாங்குடி பகுதியில் உள்ள சாலை பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரையிலும் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? 
-மயில்சாமி, புது விளாங்குடி. 
வீணாகும் குடிநீர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா புனல்வேலியிலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள தண்ணீர் குழாயில் இருந்து எப்போதும் குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த அளவிலேயே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். 
-முத்துக்கனி, புனல்வேலி. 
வாகன ஓட்டிகள் அவதி 
மதுரை கீழசந்தைபேட்டை சுடலைமுத்து சந்தின் அருகே குருவிக்காரன் தரைப்பாலம் செல்லும் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இப்பகுதியில் மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இவ்வழியே நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன், சந்தைபேட்டை. 

எரியாத தெருவிளக்குகள் 

விருதுநகர் புது பஸ் நிலையம் அருகே உள்ள மின்கம்பங்கள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் அப்பகுதி இருள் சூழந்து காணப்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. மேலும், இரவு நேரத்தில் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். 
-அப்துல்அஜீஸ், விருதுநகர். 

Next Story