வீட்டில் புகுந்து கொள்ளையடித்த 10 பேர் கைது


வீட்டில் புகுந்து கொள்ளையடித்த 10 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 2:48 AM IST (Updated: 22 Oct 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

சிகாரிப்புராவில் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தங்கநகைகள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

சிவமொக்கா: சிகாரிப்புராவில் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தங்கநகைகள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டில் புகுந்து கொள்ளை

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா எலகேரி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணை வீட்டின் கதவை உடைத்து மர்மகும்பல் புகுந்தது. அந்த கும்பல், வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டது. 

இதுகுறித்து சிராளகொப்பா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் புகுந்து கத்திமுனையில் மிரட்டி நகையை கொள்ளையடித்து சென்ற மர்மகும்பலை வலைவீசி தேடிவந்தனர். 

10 பேர் கைது

இந்த நிலையில் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்ததாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், இவர்கள் தான் சம்பவத்தன்று பண்ணை வீட்டில் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 

அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தங்கநகைகள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து கைதான 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story