வாலிபர் தற்கொலை வழக்கில் சொத்து தகராறில் அண்ணனே அடித்து கொன்று நாடகமாடியது அம்பலம்


வாலிபர் தற்கொலை வழக்கில் சொத்து தகராறில் அண்ணனே அடித்து கொன்று நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 22 Oct 2021 2:49 AM IST (Updated: 22 Oct 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

சாகர் அருகே வாலிபர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சொத்து தகராறில் அண்ணனே அடித்து கொன்று நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா: சாகர் அருகே வாலிபர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சொத்து தகராறில் அண்ணனே அடித்து கொன்று நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் தற்கொலை

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா அந்தசுரா கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்(வயது 29). இவரது அண்ணன் கிரிஷ். இந்த நிலையில் கடந்த மே மாதம் 9-ந்தேதி ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை, குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை குடும்பத்தினர் பெற்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து சாகர் புறநகர் போலீசார் தற்கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

தந்தை புகார்

இந்த நிலையில் ஹரிசின் தந்தை சாகர் புறநகர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் ஹரிசை மூத்த மகன் கிரிஷ் தான் அடித்து கொன்றதாக தெரிவித்தார். இதற்கிடையே ஹரிசின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் ஹரிசின் தலையில பயங்கர ஆயுதங்களால் தாக்கிய காயம் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார், கிரிசிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அண்ணன் கைது

அதாவது ஹரிசுக்கும், கிரிசுக்கும் நடுவே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் சொத்துக்காக 2 பேரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்றும் ஹரிசுக்கும், கிரிசுக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் உண்டாகியுள்ளது. 

 இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த கிரிஷ், தம்பி என்றும் கூட பாராமல் ஹரிசை பயங்கர ஆயுதங்களால் தலையில் அடித்துள்ளார். இதையடுத்து ஹரிசை விஷமருந்து குடிக்க வைத்து தற்கொலைக்கு முயன்றதாக குடும்பத்தினரிடம் கிரிஷ் கூறி நாடகமாடி ஆஸ்பத்திரியில் சேர்த்ததும், அதன்பிறகு சிகிச்சை பலனின்றி ஹரிஷ் பலியானதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கிரிசை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து கைதான கிரிசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story