ரூ.17 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; 5 பேர் கைது


ரூ.17 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 2:49 AM IST (Updated: 22 Oct 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.17 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு: பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.17 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பொதுமக்கள் பயன்படுத்த தடை

அம்பர்கீரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் வாசனை திரவியம் தயாரிக்கவும், மருத்துவ ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் திமிங்கல உமிழ்நீரை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சமீபகாலமாக கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் திமிங்கல உமிழ்நீர் விற்பனை அதிகரித்து உள்ளது. 

இதில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் ரூ.17 கோடி திமிங்கல உமிழ்நீரை போலீசார் பறிமுதல் செய்து உள்ள சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு மல்லேசுவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிலர் சந்தேகப்படும்படியாக சுற்றுவதாக, மல்ேலசுவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு இடத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் 5 பேரும் கைகளில் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர்.

ரூ.17 கோடி மதிப்பு

அப்போது பைகளில் திமிங்கல உமிழ்நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்களது பெயர் புனித்குமார், மதுகுமார், நந்தீஷ், யோகேஷ், கோபால் என்பது தெரிந்தது. 
மேலும் இவர்கள் 5 பேரும் சேர்ந்து திமிங்கல உமிழ்நீரை விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 17 கிலோ திமிங்கல உமிழ்நீரை போலீசார் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.17 கோடி ஆகும். கைதான 5 பேர் மீதும் மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story