எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரிக்க முயன்றவர்களால் பரபரப்பு


எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரிக்க முயன்றவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 5:41 AM IST (Updated: 22 Oct 2021 5:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சென்ற சசிகலா, அங்கு அ.தி.மு.க. கொடியேற்றி, பொதுச்செயலாளர் என்ற கல்வெட்டையும் திறந்து வைத்தார். மேலும் அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கூறினார். சசிகலாவின் பேச்சுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக கூறி, எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் சிலர் அ.தி.மு.க. கொடி, உறுப்பினர் அட்டையுடன் வந்து எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்த உருவபொம்மையை பறிமுதல் செய்தனர். 

இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story