தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 22 Oct 2021 5:54 AM IST (Updated: 22 Oct 2021 5:54 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36), தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் பட்டுவேல் (19). இவர்கள் 2 பேரும் தசரா திருவிழா தொடர்பாக செட் அமைத்து, வேடம் அணிந்து காணிக்கை வசூல் செய்தனர்.

இவ்வாறு வசூலான ரூபாய் கணக்கு பிரிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஊர் மக்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பட்டுவேல், அவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த பட்டுராஜா (21) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆறுமுகம் வசிக்கும் பகுதிக்கு சென்றனர். அப்போது, திடீரென்று தாங்கள் தயார் செய்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆறுமுகம் வீட்டில் வீசினர்.

பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். அங்கு பாட்டிலில் நிரப்பப்பட்ட பெட்ரோல் சிதறி தீப்பிடித்து எரிந்தது. உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. பின்னர் ஆறுமுகத்திற்கு 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக திசையன்விளை போலீசில் ஆறுமுகம் புகார் செய்தார். இன்ஸ்ெபக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பட்டுவேல், பட்டுராஜா ஆகியோரை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  திசையன்விளை அருகே தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story