கார் கவிழ்ந்து கோழிப்பண்ணை அதிபர் பலி


கார் கவிழ்ந்து கோழிப்பண்ணை அதிபர் பலி
x
தினத்தந்தி 22 Oct 2021 4:01 PM IST (Updated: 22 Oct 2021 4:01 PM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் தாராபுரத்தை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொங்கலூர்
பொங்கலூர் அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் தாராபுரத்தை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கோழிப்பண்ணை அதிபர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சிவபிரகாஷ் வயது 48 இவர் அந்தப் பகுதியில் விவசாயம் மற்றும் கோழிப் பண்ணை வைத்து நடத்தி வந்தார்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் காரில் சிவப்பிரகாஷ் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது காரில் பல்லடம் மற்றும் அவினாசிபாளையம் வழியாக தாராபுரம் செல்ல வந்துள்ளார். 
பலி
இரவு சுமார் ஒரு மணி அளவில் பொங்கலூர் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த சிவபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் சிவப்பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.




Next Story