வைப்பாறு மகான் செய்யது சம்சுதீன் ஷஹீது வலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு விழா
வைப்பாறு கிராமத்தில் அமைந்துள்ள மகான் செய்யது சம்சுதீன் ஷஹீது வலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாறு கிராமத்தில் அமைந்துள்ள மகான் செய்யது சம்சுதீன் ஷஹீது வலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த விழா, இந்தாண்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மவுலூது ஷரீப் நடந்தது. வாணவேடிக்கை, சிலம்பாட்டம், ஊர்வலம் நடைபெற்றது. சந்தனம் பூசப்பட்டு அங்கு வந்திருந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. மறுநாள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா விளங்குவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story