குப்பைகள் குவிந்து கிடக்கும் பூங்கா


குப்பைகள் குவிந்து கிடக்கும் பூங்கா
x
தினத்தந்தி 22 Oct 2021 5:12 PM IST (Updated: 22 Oct 2021 5:12 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ராயபுரத்தில் மாநகராட்சி பூங்காவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

திருப்பூர்
திருப்பூர் ராயபுரத்தில் மாநகராட்சி பூங்காவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். 
பூங்காக்கள் திறப்பு 
திருப்பூரில் உள்ள பொதுமக்கள் மற்றும் பனியன் தொழிலாளர்கள் பொழுதுபோக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களில் பொதுமக்கள் பலர் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சி செய்கிறார்கள். 
இதுபோல் பலர் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்-சிறுமிகளை விளையாட வைக்கிறார்கள். இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக பல மாதங்களாக பூங்காக்கள் மூடப்பட்டு கிடந்தன. இதன் பின்னர் வழங்கப்பட்ட தளர்வின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு, திறந்து செயல்பட்டு வருகின்றன. 
குப்பைகள் குவிந்து...
இந்த நிலையில் திருப்பூர் ராயபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் திறந்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த பூங்காக்களில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் மரக்கிளைகள், இலை சருகுகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகிறார்கள்.
பூங்காவில் நடை பயிற்சியும் செய்ய முடியாத நிலை உள்ளது. இதுபோல் விளையாட்டு உபகரணங்கள் பல உடைந்தும், பழுதடைந்தும் காணப்படுகின்றன. இதனால் சிறுவர்-சிறுமிகள் விளையாட முடியாத நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய வேண்டும். குப்பைகளை அகற்றி, பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-
 

Next Story