சாலையோரங்களில் தோன்றிய ‘திடீர்’ அருவிகள்
சாலையோரங்களில் தோன்றிய ‘திடீர்’ அருவிகள்
கோத்தகிரி
கோத்தகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் சாலையோரங்களில் திடீர் அருவிகள் தோன்றி உள்ளது. அவற்றை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
தொடர் மழை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிதது உள்ளது.
இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து கூக்கல்தொரை செல்லும் சாலையில் உயிலட்டி உள்ளது. இங்கு நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இங்கிருந்து ஓடும் தண்ணீரை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
புதிய அருவிகள்
தற்போது பெய்து வரும் தொடர் மழையால், அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுமட்டுமின்றி கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் திடீரென புதிதாக 2 அருவிகள் தோன்றி உள்ளன.
அதில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது காண்போரை கவரும் வகையில் உள்ளது. இந்த அருவிகளை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story