மாவட்ட செய்திகள்

தென்திருப்பேரையில் நகர பஞ்சாயத்து பெண் ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிப்புமோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கைவரிசை + "||" + 2 pound chain flush with city panchayat female employee in Tendiruperai

தென்திருப்பேரையில் நகர பஞ்சாயத்து பெண் ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிப்புமோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கைவரிசை

தென்திருப்பேரையில் நகர பஞ்சாயத்து பெண் ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிப்புமோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கைவரிசை
தென்திருப்பேரையில் நகர பஞ்சாயத்து பெண் ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை மணல்மேட்டை சேர்ந்த சங்கரநாராயணன் மனைவி தனலட்சுமி(வயது47).  இவர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் டெங்கு மஸ்தூர் ஆக வேலை பார்த்து வருகிறார். கணவர் சங்கரநாராயணன் தென்திருப்பேரை நகர பஞ்சாயத்தில் பிளம்மிங் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் 1½ மணிக்கு தனலட்சுமி தென்திருப்பேரை தெற்கு ரத வீதி வழியாக நகரப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள்  கண் இமைக்கும் நேரத்தில், அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த  தனலட்சுமி கூச்சலிட்டவாறு பின்தொடர்ந்து ஓடினார். அக்கம் பக்கத்தினரும் திரண்டும் மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.