தூத்துக்குடியில் மூட்டா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் மூட்டா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2021 7:33 PM IST (Updated: 22 Oct 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மூட்டா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மூட்டா கிளை சார்பில் நேற்று மாலை கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நெல்லை மண்டல செயலாளர் கணேசன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பணி மேம்பாட்டு கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், விதிமுறைகளுக்கு புறம்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிளை தலைவர் பிரபாவதி நன்றி கூறினார்.

Next Story