மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி + "||" + Daily Thanthi Complaint Box

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
குப்பை தொட்டியான கிணறு 
பழனி இடும்பன்மலை ரோட்டில் காந்திநகர் பகுதியில் பாழடைந்தை நிலையில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணறு திறந்த நிலையில் இருப்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டி கிணறு இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மாற்றிவிட்டனர். மேலும் சிலர் வாழைக்காய் கழிவுகளையும் கிணறு இருக்கும் இடத்தில் போட்டுச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வாழைக்காய் கழிவுகள் நிறைந்து காணப்படுவதால் கிணற்றுப்பகுதியில் விஷ ஜந்துகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே கிணற்றில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், பாழடைந்த நிலையில் உள்ள கிணற்றை சீரமைக்கவும் முன்வர வேண்டும்.
-மாரிக்கண்ணன், பழனி
பயணிகள் நிழற்குடை வேண்டும்
திண்டுக்கல்-திருச்சி சாலையில், அய்யலூர் அருகே மூக்கராபிள்ளையார்கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். ஆனால் நிழற்குடை இல்லாததால் அவர்கள் அனைவரும் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலசுப்பிரமணி, கொல்லபட்டி.
ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
பெரியகுளத்தில், மதுரை சாலையில் உள்ள வணிக வளாகம் முன்பு சாலையோரத்தை ஆக்கிரமித்து 2, 4 சக்கர வாகனங்கள் முறையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், பெரியகுளம்.
சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்
ஆத்தூர் தாலுகா வீரக்கல் ஊராட்சி வீ.கூத்தம்பட்டியில் சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களுக்கும் பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை முறையாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராணி, வீ.கூத்தம்பட்டி.
சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் 
பழனியை அடுத்த மானூர் பிரதான சாலையோரத்தில் சிலர் குப்பைகளை போட்டுச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளில், பன்றிகள் புரண்டு விட்டு குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பை கொட்டுபவர்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சின்னதுரை, மானூர்.
தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
தேனி அல்லிநகரம் 13-வது வார்டு கபிலர் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய், அல்லிநகரம்.

தொடர்புடைய செய்திகள்

1. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
2. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
3. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
4. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-