மாவட்ட செய்திகள்

வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது + "||" + The man who snatched the chain from the woman was arrested

வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது

வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது
வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
பழனி:
பழனி பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். அவருடைய மனைவி உமா மகேஸ்வரி (வயது 40). இவர், கடந்த 13-ந்தேதி தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர், உமாமகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிஓடினார்.
 இதுகுறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில்  உமா மகேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பழனி அடிவாரத்தை சேர்ந்த வாய்க்கால்சாமி (45) என்பவர்  உமாமகேஸ்வரியிடம் சங்கிலியை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.