மணல் அள்ளியவர் கைது


மணல் அள்ளியவர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 9:48 PM IST (Updated: 22 Oct 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.

தொண்டி, 
திருவாடானை தாலுகா மங்கலக்குடியை அடுத்த கூகுடி ஊராட்சி அறநூற்றிவயல் கிராமத்தில் உள்ள ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் திருவாடானை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. அப்போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்று உள்ளனர். ஆனால் போலீசாரை கண்டதும் சிலர் தப்பி ஓடி விட்டனராம். இதில்  கார் ஒன்றை பறிமுதல் செய்த போலீசார் பாஸ்கரன் (வயது 41) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக திருவாடானை மண்டல துணை தாசில்தார் சேதுராமன் அளித்த புகாரின் பேரில் மணக்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டி, கட்டவிளாகம் கிராமத்தை சேர்ந்த மதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story