திண்டுக்கல்லில் தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட அனைத்து தெருவியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க நிர்வாகி செல்வகணேசன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. சங்க மாவட்ட செயலாளர் பாலன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். போலீசார் சாலையோர வியாபாரிகளை அச்சுறுத்துவது, அவர்களின் பொருட்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். தெருவியாபாரிகளுக்கு வியாபார சான்று வழங்க வேண்டும். வீடு இல்லாத தெரு வியாபாரிகளுக்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story