லாட்டரி விற்ற 3 பேர் கைது


லாட்டரி விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 10:01 PM IST (Updated: 22 Oct 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவ ஞான பாண்டியன் தலைமையிலான போலீசார்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரண்மனை உள்ளிட்ட பகுதி களில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் வி.கே.சாமி தெருவை சேர்ந்த சரவணன் (வயது53), வடக்குத் தெரு யானைக்கல் வீதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அங்கு ராஜா (52), பவுண்டுக்கடை தெரு, வேலு மகன் பாண்டி (60) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு களை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.17 ஆயிரத்து 540.

Next Story