நடப்பாண்டில் 326 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 326 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
விளமல்:
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 326 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் அடியக்கமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 2021-2022-ல் 326 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் 8 நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இது நாள்வரை நடப்பு சம்பா பருவத்தில் சன்ன ரகம் 58 ஆயிரத்து 666 டன்களும், பொது ரகம் 44 ஆயிரத்து 508 டன்களும் ஆக கூடுதலாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 174 டன்கள் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் 61 ஆயிரம் டன் சேமிப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது.
தினமும் 1000 நெல்மூட்டைகள்
தினசரி 8 ஆயிரம் டன் வீதம் கொள்முதல் நடைபெற்று வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி 1000 நெல் மூட்டைகள் வீதம் கொள்முதல் செய்ய கொள்முதல் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு தார்ப்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக அடுக்கி மூடி வைக்கப்படுகிறது.
பாதுகாப்பாக சேமிக்க நடவடிக்கை
தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை கிடங்குகளில் பாதுகாப்பாக சேமிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுநாள் வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எதுவும் மழையினால் பாதிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். .
Related Tags :
Next Story