வாயில் மண்எண்ணெய் ஊற்றி சாகசம் செய்தபோது விபரீதம்: தீயில் கருகி 6 வயது சிறுமி பலி


வாயில் மண்எண்ணெய் ஊற்றி சாகசம் செய்தபோது விபரீதம்: தீயில் கருகி 6 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 22 Oct 2021 10:04 PM IST (Updated: 22 Oct 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

வாயில் மண்எண்ணெய் ஊற்றி சாகசம் செய்தபோது, தீயில் கருகி 6 வயது சிறுமி பலியானாள்.

ராயக்கோட்டை:
சர்க்கஸ் சாகசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஒன்னுப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகள் பூர்விகா (வயது 6). இவள் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுமி சர்க்கசில் வாயில் மண்எண்ணெய் ஊற்றி நெருப்பில் ஊதும் சாகசத்தை பார்த்தாள். இதனால் அவளுக்கும், அதேபோன்று சாகசம் செய்ய வேண்டும் என்று விபரீத ஆசை ஏற்பட்டது.
தீயில் கருகி பலி
அதன்படி, கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த அவள் வாயில் மண்எண்ணெய்யை ஊற்றினாள். இதையடுத்து நெருப்பை பற்ற வைத்து, அதன் மீது ஊதினாள். அப்போது திடீரென தீ, சிறுமி மீது பற்றியது. இதனால் வலியால் அவள் அலறினாள். அவளது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் சிறுமி தீயில் கருகினாள்.
இதையடுத்து அவள் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பூர்விகா பலியானாள். இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கெலமங்கலம் அருகே வாயில் மண்எண்ணெய் ஊற்றி சாகசம் செய்தபோது, சிறுமி தீயில் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story