கல்லூரி பஸ்சை வழிமறித்து ரகளை செய்து வீடியோ பதிவிட்ட 3 பேர் கைது
குடிபோதையில் கல்லூரி பஸ்சை வழிமறித்து ரகளை செய்து வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இளையான்குடி,
குடிபோதையில் கல்லூரி பஸ்சை வழிமறித்து ரகளை செய்து வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடியோ
இளையான்குடி தனியார் கல்லூரியில் இருந்து பரமக்குடி நோக்கி மாணவிகளை ஏற்றிச்சென்ற 2 பஸ்சை வழிமறித்து 3 பேர் ரகளை செய்துள்ளனர்.
ரகளை செய்தவர்களில் மற்றொருவர் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக இளையான்குடி காவல்துறையினர் வெளியான வீடியோ அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
கைது
இந்தநிலையில் ரகளையில் ஈடுபட்டது குமாரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அவின் குமார் (வயது21), ஆனந்தராஜ்(20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story