ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 கிராம ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 கிராம ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணை தலைவர், மற்றும் 60 கிராம ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஜம்பை, கடம்பூர் ஆகிய 2 ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கு வார்டு உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவியது.
இதில் கடம்பூர் ஊராட்சியில் மாலையில் நடைபெற்ற துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 9 வார்டு உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே ஓட்டுப்போட வந்தனர்.
அதேபோல் ஜம்பை ஊராட்சியில் மதியம் 12 மணி வரை ஓட்டுப்போட வார்டு உறுப்பினர்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து ரிஷிவந்தியம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் உத்தரவின் பேரில், 2 ஊராட்சிகளிலும் துணைத்தலைவர் தேர்தலை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக துணை தேர்தல் அலுவலர்கள் அறிவித்து, அதற்கான அறிவிப்பினை ஊராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டினர்.
Related Tags :
Next Story