துணைத்தலைவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க தி.மு.க. எதிர்ப்பு. அ.தி.மு.க.வின் மறியல்


துணைத்தலைவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க தி.மு.க. எதிர்ப்பு. அ.தி.மு.க.வின் மறியல்
x
தினத்தந்தி 22 Oct 2021 5:28 PM GMT (Updated: 22 Oct 2021 5:28 PM GMT)

அகரம் ஊராட்சிமன்ற துணைத்தலைவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அ.தி.மு.க.வின் மறியலில் ஈடுபட்டனர்.

அணைக்கட்டு 
 
அகரம் ஊராட்சிமன்ற துணைத்தலைவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அ.தி.மு.க.வின் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வி க்கு 5 ஓட்டுகளும், மதன்குமாருக்கு 5 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் குலுக்கல் முறையில் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இதற்கு தமிழ்ச்செல்வி சார்பில் அ.தி.மு.க.வினர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்பரசு தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் குடியாத்தம்- ஆம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் மறியல் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்ததும் வேலூர் மதுவிலக்கு துணைபோலீஸ்சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குலுக்கல் முறையில் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தால் சாலை மறியலை கைவிடுவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களும் சம்மதித்ததால் தமிழ்ச்செல்வி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்

Next Story