திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களிலும் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவராக மலைவாழ் பெண் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவராக மலைவாழ் பெண் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 வார்டுகளில் தி.மு.க. சார்பில் 18 பேரும், அ.தி.மு.க. சார்பில் 6 பேரும், சுயேச்்சை ஒருவரும் வெற்றி பெற்றனர். இந்தநிலையில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று காலை ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. தி.மு.க. சார்பில் எஸ். சத்யா சதிஷ்குமார் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிச்சாமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேறுயாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் ஒன்றியக் குழு தலைவராக எஸ். சத்யா சதீஷ்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிச்சாமி அறிவித்தார். துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஸ்ரீதேவி காந்தி 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கந்திலி
கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த தேர்தலில் 10 வார்சுகளில் தி.மு.க. கூட்டணியும், 8 இடங்களில் அ.தி.மு.க., ஒரு இடத்தில் பா.ஜ.க., 3 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தல் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் திருமதி திருக்குமரன், அ.தி.மு.க. சார்பில் டாக்டர் லீலா சுப்ரமண்யம் போட்டியிட்டனர். தேர்தல் அலுவலர் ரூபேஷ்குமார் தேர்தலை நடத்தினார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருமதி திருக்குமரன் 13 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை தலைவர் நாற்காலியில் அமரவைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரகலா, முகமதுகலீல் ஆகியோர் கையெழுத்து பெற்றனர்.
துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் ஜி. மோகன்குமார், அ.தி.மு.க. சார்பில் ஆர்.மணிகண்டன், போட்டியிட்டனர். இருவரும் தலா 11 ஓட்டுகள் பெற்றதால் குலுக்கல் முறையில் மோகன்குமார் தேர்தெடுக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற இருவருக்கும் திருப்பத்தூர் தொகுதி ஏ. நல்லதம்பி எம்.எல்.ஏ. உள்பட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 வார்டுகளில் 15 இடங்களில் தி.மு.க., 5 இடங்களில் அ.தி.மு.க., ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். நேற்று ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
தி.மு.க. சார்பில் விஜயா அருணாசலம், அ.தி.மு.க. சார்பில் கு.லலிதா மோகன்குமார் போட்டியிட்டனர். தேர்தல் அலுவலர் மகேஷ்குமார் தேர்தலை நடத்தினார். இதில் விஜயா அருணாசலம் 16 ஓட்டுகள் பெற்று ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் டி.ஆர். ஞானசேகரன், அ.தி.மு.க. சார்பில் டாக்டர் எல்.திருப்பதி, போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.ஞானசேகரன் 16 ஓட்டுக்கள் பெற்று துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், சந்திரன், வாழ்த்து தெரிவித்தனர்.
தலைவராக வெற்றி பெற்ற விஜயா அருணாசலம் தலைவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது. வெற்றி பெற்ற ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு நல்லதம்பி எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர் வாழ்த்து தெரிவித்தனர். திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் முறையாக ஜவ்வாது மலையைச் சேர்ந்த மலைவாழ் பெண் ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிட தக்கது.
நாட்டறம்பள்ளி
நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு நேற்று காலை நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த வெண்மதி 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயக்குமாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதன் பிறகு ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தேவராஜ் 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆலங்காயம்
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சங்கீதா பாரி 12 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் துணைத்தலைவராக தி.மு.க.வை சார்ந்த பி.பூபாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மாதனூர்
மாதனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு நேற்று மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சுரேஷ்குமார், அ.தி.மு.க. சார்பில் விஜயலட்சுமி வெங்கடேசன் போட்டியிட்டனர். இதில் 17 வாக்குகள் பெற்று சுரேஷ்குமார் வெற்றி பெற்றார்.
துணைத் தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சாந்தி சீனிவாசன் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் துரை, மணவாளன் ஆகியோர் வெற்றி பெற்ற சான்றிதழை வழங்கினர்.
Related Tags :
Next Story