கே.வி.குப்பம் அருகே திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் இளம்பெண் தற்கொலை
தினத்தந்தி 22 Oct 2021 11:30 PM IST (Updated: 22 Oct 2021 11:30 PM IST)
Text Sizeதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் இளம்பெண் தற்கொலை
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த மேல்கிருஷ்ணாபரம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சுதி (வயது19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரி செல்ல ஆர்வமுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை படிக்கவைக்க வசதி இல்லாததால், அவருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றதாக தெரிகிறது.
இதை அறிந்த சுதி மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து உறவினர் கொடுத்த புகாரின்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire