ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது


ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 22 Oct 2021 11:39 PM IST (Updated: 22 Oct 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். காவேரிப்பாக்கத்தில் துணைத்தலைராக சுயேச்சை தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, காவேரிப்பாக்கம், திமிரி, அரக்கோணம், சோளிங்கர், நெமிலி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. 
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

வாலாஜா ஒன்றியத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 20 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க. - 14, அ.தி.மு.க.- 3, காங்கிரஸ் கட்சி - 1, பா.ம.க.-1, சுயேச்சை- 1 இடங்களையும் கைப்பற்றினர். இதில் ஒன்றிய குழுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஷேசா வெங்கட், துணைத்தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

ஆற்காடு

ஆற்காடு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 17 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க.- 15, அ.தி.மு.க.- 1, பா.ம.க.-1 இடங்களையும் கைப்பற்றினர். இதில் ஒன்றிய குழுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த புவனேஸ்வரி, துணைத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஸ்ரீமதி நந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.

திமிரி

திமிரி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க. - 15, அ.தி.மு.க.- 4 இடங்களையும் கைப்பற்றினர். இதில் ஒன்றிய குழுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.அசோக், துணைத்தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டனர்.

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க.- 5, அ.தி.மு.க.- 1, பா.ம.க.- 1, காங்கிரஸ் கட்சி - 1, சுயேட்சை- 2 இடங்களையும் கைப்பற்றினர். இதில் ஒன்றிய குழுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த அனிதா குப்புசாமி, துணைத் தலைவராக ‌சுயேச்சையை சேர்ந்த முனியம்மாள் கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டனர்.

சோளிங்கர்

சோளிங்கர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க.- 10, அ.தி.மு.க.- 1, பா.ம.க.- 6, காங்கிரஸ் கட்சி -2 இடங்களையும் கைப்பற்றினர். இதில் ஒன்றிய குழுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த கலைக்குமார், துணைத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பூங்கொடி ஆனந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டனர்.

அரக்கோணம்

அரக்கோணம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 23 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க.- 17, அ.தி.மு.க.- 1, பா.ம.க.- 3, பாரதிய ஜனதா - 1, அ.ம.மு.க.- 1 இடங்களையும் கைப்பற்றினர். இதில் ஒன்றிய குழுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.நிர்மலா, துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த புருஷோத்தமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டனர்.


Next Story