மாவட்ட செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி + "||" + Girl Child Safety Awareness Program

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரியாபட்டி
காரியாபட்டி போலீஸ் நிலையத்தின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமை தாங்கினார். கே.கரிசல்குளம், வக்கணாங்குண்டு ஆகிய கிராமங்களில் நடந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், ஆனந்தஜோதி ஆகியோர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பாலியல் சம்பவம் நடந்தாலோ, பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். வேலைக்கு சென்று வரும் பெண்கள் பிரச்சினைகளை சந்தித்தால், அவர்களது பாதுகாப்பு உதவிக்கு என 181 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் சந்தேகப்படும்படி யாரேனும் உங்கள் பகுதியில் இருந்தால் அவர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லிக்குப்பத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
வடகிழக்கு பருவமழையையொட்டி நெல்லிக்குப்பத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
2. வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சியில் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.
3. மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி
தியாகதுருகம் அருகே மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.