போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகை முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும், அகவிலைப்படியை நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story