மாவட்ட செய்திகள்

கிரிக்கெட் பேட்டால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி + "||" + The wife who attacked the cricket bat and killed the driver

கிரிக்கெட் பேட்டால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி

கிரிக்கெட் பேட்டால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி
கிரிக்கெட் பேட்டால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி
அருப்புக்கோட்டை
டிரைவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
டிரைவர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 45). இவருடைய மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 9 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர். டிரைவராக பணிபுரிந்து வந்த ராஜாராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், மது போதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜாராம் தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.
கிரிக்கெட் பேட்டால் தாக்கினார்
இதனால் ஆத்திரம் அடைந்த ரேவதி அருகில் கிடந்த கிரிக்கெட் பேட்டால் ராஜாராம் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜாராம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார். ராஜாராமின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மனைவி கைது
மேலும் இந்த சம்பவம் குறித்து ராஜாராமின் தாயார் ராஜம்மாள்(67) அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேவதியை கைது செய்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.