7 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம்


7 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 23 Oct 2021 1:48 AM IST (Updated: 23 Oct 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

7 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், விக்கிரமங்கலம், உடையார்பாளையம், தா.பழூர் போன்ற போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சாராயம், மது விற்பனை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள், ஜெயங்கொண்டத்தில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், கிளைச் சிறையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் கைதிகள் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களை திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், ஜெயிலர் பழனிக்குமார் பரிந்துரையின்பேரில் ஆயுதப்படை தலைமை காவலர் பீட்டர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 கைதிகளை உரிய கொரோனோ பரிசோதனையுடன், டாக்டருடைய ஆலோசனையின்படி திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Related Tags :
Next Story