புதிய மருத்துவமனை கட்ட கோரி சிருங்கேரியில் முழுஅடைப்பு போராட்டம்
100 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்ட கோரி சிருங்கேரியில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை.
சிக்கமகளூரு:100 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்ட கோரி சிருங்கேரியில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை.
100 படுக்கைகள் கொண்ட...
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் அரசு தாலுகா மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தெரிகிறது. மேலும் தாலுகா மருத்துவமனையில் படுக்கைகளும் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் தாலுகா மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். சிருங்கேரி மருத்துவமனையில் தரமான சிகிச்சை கிடைக்காமல் மக்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் சிருங்கேரியில் 100 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும், தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், மக்களின் கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிருங்கேரியில் முழுஅடைப்பு
இந்த நிலையில், சிருங்கேரியில் 100 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 22-ந்தேதி (அதாவது நேற்று) சிருங்கேரியில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்பட 35 அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேகவுடா ஆதரவு தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று சிருங்கேரியில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.
சிருங்கேரி டவுனில் உள்ள வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்தனர். ஆட்டோக்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்கவில்லை. நகரில் மக்கள் நடமாட்டமும் இல்லை. வாகன போக்குவரத்து இல்லாததாலும், கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் சிருங்கேரி நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் நேற்று சிருங்கேரி டவுனில் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ஊர்வலகமாக தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் ராஜேந்திரனிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். சிருங்கேரியில் நேற்று நடந்த முழுஅடைப்பு போராட்டம் எந்த அசம்பாவித சம்பவங்களும் இன்றி நடந்தது.
வெளியூர் செல்ல வேண்டிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story