பள்ளி மாணவி மர்ம சாவு 8 மாதங்களுக்கு பிறகு மூதாட்டி கைது உறவுக்கார பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

பள்ளி மாணவி மர்ம சாவு 8 மாதங்களுக்கு பிறகு மூதாட்டி கைது உறவுக்கார பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Oct 2021 3:25 AM IST (Updated: 23 Oct 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே பள்ளி மாணவி மர்ம சாவு தொடர்பாக 8 மாதங்களுக்கு பிறகு தற்கொலைக்கு தூண்டியதாக மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் உறவுக்கார பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே பள்ளி மாணவி மர்ம சாவு தொடர்பாக 8 மாதங்களுக்கு பிறகு தற்கொலைக்கு தூண்டியதாக மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் உறவுக்கார பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பள்ளி மாணவி மர்ம சாவு
தொப்பூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகள் செல்வராணி (வயது 11). இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 5.2.21 அன்று மாணவி தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த மூதாட்டி கலா (60), இவருடைய உறவினர் சத்யா ஆகிய 2 பேரும் தான் தனது சாவுக்கு காரணம் என மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்தது தெரியவந்தது. 
மூதாட்டி கைது
இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பின்னர், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக, மூதாட்டி கலாவை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சத்யாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 8 மாதங்களுக்கு பிறகு பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில், மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story