கோவில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு; நெல்லையில் இந்து முன்னணியினர் ஊர்வலம்
கோவில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் இந்து முன்னணி சார்பில் பிரசார ஊர்வலம் நடைபெற்றது.
நெல்லை:
தமிழகத்தில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில், நெல்லை டவுனில் நேற்று பிரசார ஊர்வலம் நடந்தது. நெல்ைல டவுன் லாலாசத்திரம் முக்கு ராமர் கோவிலில் இருந்து நெல்லையப்பர் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் சுவாமி ேவடம் அணிந்து பங்கேற்ற குழந்தைகள், பக்தர்கள் வழங்கிய நகைகளை அரசாங்கம் உருக்கி விட்டது என்று எழுதிய வாசகங்களை ஏந்தி சென்றனர்.
பின்னர் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியதாவது:-
கடந்த 1977-ம் ஆண்டு கோவில் தங்க நகைகள் உருக்கியது தொடர்பாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த கோவிலில் எவ்வளவு நகைகள் உருக்கப்பட்டது?, அவற்றிற்கான தொகை எந்த வங்கியில் டெபாசிட் ெசய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? போன்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
கோவில் நகைகள் உருக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து வருகிற 26-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க எந்தவித தடையும் விதிக்க கூடாது. இதில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசார ஊர்வலத்தில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சிவா, தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தங்கமனோகர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் இசக்கி, ராகவேந்திரா, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்கள் சுடலை, செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் சங்கர், துரைராஜ், மாநில பேச்சாளர் காந்திமதிநாதன், இந்து வியாபாரி சங்க தலைவர் காசி, இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் நத்தம் முருகன், அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர்கள் பகவதி, குருவம்மாள் அம்பலவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story