கடன் தருவதாக கூறி பெண்களிடம் ரூ.1.44 கோடி மோசடி; 3 பேர் மீது வழக்கு


கடன் தருவதாக கூறி பெண்களிடம் ரூ.1.44 கோடி மோசடி; 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Oct 2021 3:43 AM IST (Updated: 23 Oct 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

கடன் தருவதாக கூறி பெண்களிடம் ரூ.1.44 கோடி மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, சேரன்மாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு மனு கொடுத்தனர். அந்த மனுவில், “சேரன்மாதேவியை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் நிதி நிறுவனம் தொடங்கி குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி பெண்கள் பலரிடம் முன்பணம் வாங்கினார். ஆனால் அவர் சொன்னதுபோல் கடன் தராமல் ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், அந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி ராமசந்திரன் உள்ளிட்ட 3 பேர், பொதுமக்கள் பலரிடம் முன்பணமாக சுமார் ரூ.1 கோடியே 44 லட்சம் மோசடி செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார், ராமசந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story