விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2021 4:04 AM IST (Updated: 23 Oct 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
ெநல்லை சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் கார்த்திக் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நெல்லை உடையார்பட்டி குளத்தின் கரையில் 40 வருடங்களாக சிட்டமாளும், அவருடைய சகோதரர் காந்தி என்பவரும் கடை நடத்தி வருகிறார்கள். இந்த கடையானது கலெக்டரால் சிறைவாசி கைதிகளின் மறுவாழ்வுக்காக சிறப்பு அனுமதியில் வழங்கப்பட்டது ஆகும். இந்த நிலையில் அந்த கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கடையால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்த பாதிப்பும் கிடையாது. எனவே அங்கு ெதாடர்ந்து கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story