நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம்


நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 23 Oct 2021 4:44 AM IST (Updated: 23 Oct 2021 9:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை,

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் முக்கியமானது ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஐப்பசி மாதம் திருக்கல்யாண விழா மிக சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்துக்கு பல்வேறு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 1-ந்தேதி மதியம் 12 மணிக்கு சேரன்மாதேவி ரோட்டில் அமைந்துள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. திருக்கல்யாணம் முடிந்து 3 நாட்கள் ஊஞ்சல் வைபவமும், நிறைவாக சுவாமி-அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேசமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.

Next Story