சிறுமிகளுக்கு பாலியல் சில்மிஷம்; போக்சோவில் 2 பேர் கைது
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சிறுமிகளுக்கு பாலியல் சில்மிஷம் செய்ததாக 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (42) என்பவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து அவருக்கு ஆசை வார்த்தைகள் கூறி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து சிறுமியிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்ட கோபாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி வீட்டிலிருந்து மாயமானார். இந்த புகார் தொடர்பாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரேம்குமார் (21) என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று திருமணம் செய்துகொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேம்குமார் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story