நெல்லிக்குப்பம் அருகே அழுகிய நிலையில் தொழிலாளி பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை


நெல்லிக்குப்பம் அருகே அழுகிய நிலையில் தொழிலாளி பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 23 Oct 2021 4:02 PM IST (Updated: 23 Oct 2021 4:02 PM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே அழுகிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டீஸ்வரம் பகுதியில் சாக்குமூட்டை ஒன்றில் பிணம் ஒன்று உள்ளதாக நெல்லிக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடினர். அப்போது திருக்கண்டீஸ்வரம் முட்புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. ஆனால் சாக்கு மூட்டையில் பிணம் ஏதும் இல்லை.

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான குமார் (வயது 55) என்பது தெரியவந்தது. இதையடுத்து குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை யாரேனும் கொலை செய்து முட்புதரில் வீசிவிட்டு சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story