கத்தியால் கழுத்தை அறுத்து வியாபாரி தற்கொலை


கத்தியால் கழுத்தை அறுத்து வியாபாரி  தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2021 6:21 PM IST (Updated: 23 Oct 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே மதுஅருந்த பணம் கொடுக்காததால் கத்தியால் கழுத்தை அறுத்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூர் அருகே மதுஅருந்த பணம் கொடுக்காததால் கத்தியால் கழுத்தை அறுத்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

மதுஅருந்த பணம் கேட்டு வாக்குவாதம்

வேலூரை அடுத்த ஊசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வில்வகுமார் (வயது 48). இவர் மிக்சி, கிரைண்டர், சேர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை தெரு, தெருவாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார். 

வில்வகுமாருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்தாகவும், அதனால் அவருக்கும், மனைவி ஜெயப்பிரியாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் வில்வகுமார் வியாபாரம் முடிந்ததும் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். 

மேலும் அவர் வாங்கி சென்ற மதுபாட்டிலையும் வீட்டில் வைத்து குடித்துள்ளார். அதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

சிறிதுநேரத்துக்கு பின்னர் வில்வகுமார் மேலும் மதுஅருந்துவதற்கு பணம் தரும்படி ஜெயப்பிரியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.


வியாபாரி தற்கொலை

மதுபோதையில் இருந்த அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மதுஅருந்த பணம் கொடுக்காவிட்டால் கழுத்தை அறுத்து கொள்வேன். அல்லது உன்னை குத்தி கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

இதையடுத்து மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதனால் விரக்தியடைந்த வில்வகுமார் திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்து கொண்டார். 

இதில், துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த மனைவி ஜெயப்பிரியா, வில்வகுமார் உடலை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வில்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story