கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் நேரில் ஆய்வு
குடியாத்தம் பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
குடியாத்தம்
குடியாத்தம் பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
ெகாரோனா தடுப்பூசி முகாம்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் 207 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களும், குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 63 கொரோனா தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் 270 முகாம்கள் அமைக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமாலை ஊராட்சி கொச்சாலூர் கிராமத்திலும், கொண்டசமுத்திரம் ஊராட்சி காந்தி நகர் மற்றும் விநாயகபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி அலுவலகத்திலும், திருவள்ளுவர் நிதி உதவி தொடக்கப் பள்ளியிலும் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழிப்புணர்வு
அப்போது அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரம் மற்றும் பொதுமக்களுக்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கூறினார்.
ஆய்வின்போது குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.எஸ்.யுவராஜ், எஸ்.சாந்தி, குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில்தாமஸ், வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார், சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) பிரபுதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எர்த்தாங்கல், பெரும்பாடி, அக்ராவரம், கல்லப்பாடி, வீரிசெட்டிபல்லி பரதராமி, டி.பி.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
அப்போது தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், களப்பணி உதவியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story