கர்நாடக அரசு பஸ்சில் அடிபட்டு புள்ளிமான் சாவு
கர்நாடக அரசு பஸ்சில் அடிபட்டு புள்ளிமான் சாவு
கூடலூர்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மைசூரு நோக்கி கர்நாடக அரசு பஸ் பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. மாக்கமூலா என்ற இடத்தில் சென்றபோது திடீரென அருகில் உள்ள மூங்கில் காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று வேகமாக ஓடி வந்து சாலையை கடக்க முயன்றது.
இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் உடனே பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் புள்ளிமான் பஸ்சில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து புள்ளிமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். அதன்பின்னர் கர்நாடக அரசு பஸ்சும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story