சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்


சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2021 7:09 PM IST (Updated: 23 Oct 2021 7:09 PM IST)
t-max-icont-min-icon

சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்

திருச்சி, அக். 24-
திருச்சி மண்டல மலைக்கோட்டை கிளை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். தீரன்நகர், துவாக்குடி, மண்ணச்சநல்லூர், லால்குடி, மலைக்கோட்டை  ஆகிய 5 கிளைகள் இணைந்து நடத்திய இந்த போராட்டத்திற்கு முருகன் தலைமை தாங்கினார். மலைக்கோட்டை கிளை செயலாளர் பிரபு வரவேற்றுப் பேசினார். தலைவர் சீனிவாசன், சி.ஐ.டி.யூ.மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாரியப்பன் நன்றி கூறினார்.

Next Story