பழனி பஸ்நிலையத்தில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
பழனி பஸ்நிலையத்தில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
பழனி:
தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வு துறை சார்பில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பழனி பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பழனி கோட்ட கலால் அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கினார். பழனி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ்ஜெயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது பறை, தவில் இசை கலைஞர்கள் பாட்டு, கட்டைக்கால் நடனம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மதுபானம், கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியை பஸ்நிலையத்தில் இருந்த பயணிகள் ஏராளமானோர் கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story