பேக்கரியில் புழு இருந்த ‘பப்ஸ்’ விற்பனை
தேவாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் புழு இருந்த பப்ஸ் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்
தேவாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் புழு இருந்த பப்ஸ் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
புழு இருந்த ‘பப்ஸ்’
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலா அரசு தேயிலை தோட்ட சரகம்-2 பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவர் தனது மகனுடன் தேவாலா பஜாரில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார். அப்போது மகன் சாப்பிட கேட்டதால், பப்ஸ் ஆர்டர் செய்தார்.
அதன்படி ஊழியர் கொண்டு வந்து கொடுத்த பப்சை ராஜா வாங்கி பார்த்தபோது, அதில் புழு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பேக்கரி உரிமையாளரிடம் கேட்டார். அதற்கு அது வேறு ஒன்றுமில்லை. எறும்பு தான் உள்ளது என்று ஏளனமாக உரிமையாளர் பதில் கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரவியது.
அதிகாரியிடம் புகார்
இதனால் உணவு பண்டங்களை தரமற்ற முறையில் விற்பனை செய்த பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷிடம் புகார் செய்தார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் கூறியதாவது:-
உணவு பண்டங்கள் தயார் செய்யும்போது கவனக்குறைவாக செயல்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் அசாம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பார்கள் என்பது தெரியவில்லை. வாடிக்கையாளர்களின் உடல் நலத்தில் அக்கறை இல்லாமல் அலட்சியமாக செயல்பட்டு வரும் பேக்கரி மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story