சிவகளை, பெருங்குளம் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு
சிவகளை, பெருங்குளம் பகுதியில் வடிகால் வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள ஆத்தாம்பழம், மங்கலகுறிச்சி, பெருங்குளம், மாங்கொட்டாபுரம், சிவகளை, பராக்கிரமபாண்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் வயல்களில் தேங்கும் தண்ணீர் வடிய வைக்க ஆழங்கால் வடிகால் வாய்க்காலில் செடி, கொடி ஆக்கிரமித்து மற்றும் மணல் சரிந்து போயிருந்ததால் மழைக்காலத்தில் பயிர்கள் அழிந்து விடும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே வடிகால்களை தூர்வார வேண்டும் எனவும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் உடனடி நடவடிக்கையாக பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.
சிவகளையில் இருந்து பெருங்குளம் செல்லும் ஆழங்கால் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு வேலையை துரிதப்படுத்தினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் எடிசன், ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர்கள் மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்து பிரதாபன், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பிச்சையா, பெருங்குளம் நகர செயலாளர் மூக்காண்டி, தி.மு.க. அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story