இரும்பு பிளேட்டுகள் விழுந்து தொழிலாளி பலி
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் இரும்பு பிளேட்டு விழுந்து ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். நஷ்டஈடு கேட்டு உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் இரும்பு பிளேட்டு விழுந்து ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். நஷ்டஈடு கேட்டு உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த ெதாழிலாளி
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 41). இவருக்கு காசிஅம்மாள் (38) என்ற மனைவியும், ஹாசினி (9) என்ற மகளும் உள்ளனர்.
ஏழுமலை ராணிப்பேட்டை அருகே உள்ள பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று பெல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, கிரேனில் இருந்து எதிர்பாராதவிதமாக இரும்பு பிளேட்டுகள் சரிந்து விழுந்ததில், ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
தர்ணா போராட்டம்
இதனையடுத்து இன்று காலை ராணிப்பேட்டை பெல் நிறுவனம் முன்பு நஷ்டஈடு கேட்டு ஏழுமலையின் மனைவி மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் மற்றும் பெல் நிறுவன அதிகாரிகள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெல் நிறுவனம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story