மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது


மூங்கில்துறைப்பட்டு அருகே  சாராயம் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2021 10:37 PM IST (Updated: 23 Oct 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு

வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது உள்ளே ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.  இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த ஆனைமடுவு பகுதியை சேர்ந்த குப்புசாமி(வயது 45), ரங்கப்பனூர் பகுதியை சேர்ந்த கண்ணன்(40) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Next Story