திமுக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தன் மரணம்


திமுக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தன்  மரணம்
x
தினத்தந்தி 23 Oct 2021 10:43 PM IST (Updated: 23 Oct 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

திமுக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பேரணாம்பட்டு

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
 
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சட்டமன்ற தொகுதி (மறு சீரமைப்பு முன்பு இருந்த சட்டமன்ற தொகுதி) தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆசிரியர் வெ.கோவிந்தன் (வயது 80). இவர் பேரணாம்பட்டில் உள்ள வீட்டில் இருந்தபோது இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். 

ஆசிரியராக பணியில் இருந்த அவர் தி.மு.க.வில் ஈடுபாடு கொண்டு அக்கட்சியின் தீவிர ஆதரவாளரானார்.

1989-ம் பேரணாம்பட்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2 ஆண்டுகளில் தமிழக அரசு கலைக்கப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இவரது உடலுக்கு ேஜாலார்பேட்டை எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான தேவராஜ், எம்.எல்.ஏ.க்கள் அமலு விஜயன், வில்வநாதன், முன்னாள் எம்.பி. முகமது சகி, நகர தி.மு.க. செயலாளர் ஆலியார் ஜூபேர் அஹம்மத், ஒன்றிய செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், துணைத்தலைவர் லலிதா டேவிட் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தனுக்கு நாயகம் என்ற மனைவியும், சரவணன், கதிரவன் ஆகிய 2 மகன்களும், கனிமொழி, தேன்மொழி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

Next Story