மன்னார்குடியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி 4 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


மன்னார்குடியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி 4 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Oct 2021 10:45 PM IST (Updated: 23 Oct 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி 4 பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மன்னார்குடி:-

மன்னார்குடியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி 4 பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரிவாள் வெட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல முதல் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது60). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய கணவர் உயிரிழந்துவிட்டார். மகளும் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில் மாரியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அரிவாளால் மாரியம்மாளை வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரியம்மாளை மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மர்ம நபர் அரிவாளால் வெட்டியதில் மாரியம்மாளின் தலை, காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் அரசு மருத்துவமனைக்கு சென்று மூதாட்டி மாரியம்மாளிடம் விசாரணை செய்தார்.
மேலும் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டியை அரிவாளால் வெட்டி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story