பள்ளிபாளையத்தில் ஆட்டோ டிரைவரிடம் மொபட், செல்போன் பறிப்பு பெண் உள்பட 5 பேர் கைது
பள்ளிபாளையத்தில் ஆட்டோ டிரைவரிடம் மொபட், செல்போன் பறிப்பு பெண் உள்பட 5 பேர் கைது
பள்ளிபாளையம்:
ஈரோடு பெரிய சேமூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மகநே்திரன் (வயது 30) என்பவர் பள்ளிபாளையம் தெற்குபாளையம் வாய்க்கால் பகுதியில் மொபட்டில் சென்று ெகாண்டிருந்தார். அப்போது அந்த வழியில் நின்ற பெண் ஒருவர் லிப்ட் கேட்பது போல் சைகை காட்டினார். இதை பார்த்த மகேந்திரன் மொபட்டை நிறுத்தினார். அப்போது திடீரென அங்கு நின்ற 4 பேர் பெண்ணுடன் சேர்ந்து மகேந்திரனை தாக்கி அவரிடம் இருந்து மொபட், செல்போன் மற்றும் ரூ.500 ஆகியவற்றை பறித்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அந்த பெண் மட்டும் சிக்கி கொண்டார். இதையடுத்து பெண்ணை பள்ளிபாளையம் போலீசாரிடம் மகேந்திரன் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் சிக்கிய பெண் பள்ளிபாளையத்தை சேர்ந்த மீனா (35) என தெரியவந்தது. இதுதொடர்பாக மகேந்திரன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்ததுடன், தப்பியோடிய 4 பேரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை பள்ளிபாளையம் பஸ் நிலைய சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வந்த 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்குள் சுதாரித்து கொண்ட போலீசார் அவர்கள் 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் ேபாலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பள்ளிபாளையம் சத்யா நகரை சேர்ந்த பிரகாஷ் (24), கவுதம் (25), ஒட்டமெத்தையை சேர்ந்த கணேசன் (21), ஆனந்த் (25) என்பதும், அவர்கள் மகேந்திரனிடம் மொபட், செல்போன் மற்றும் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மொபட், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story