அமராவதி பகுதி முதலைப்பண்ணை புதுப்பொலிவு பெறுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
அமராவதி பகுதியில் முதலைப்பண்ணை புதுப்பொலிவு பெறுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தளி
அமராவதி பகுதியில் முதலைப்பண்ணை புதுப்பொலிவு பெறுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முதலைப்பண்ணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு முன்பு பூங்கா, ராக் கார்டன் அணையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் முதலைப்பண்ணை உள்ளது.
இங்குள்ள பண்ணையில் பெண் முதலைகள் உள்ளிட்ட 96 சதுப்பு நில முதலைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.அவற்றை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக வந்து செல்கின்றனர்.
விழிப்புணர்வு ஓவியம்
இந்த சூழலில் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளை கவரும் விதமாக முதலைப்பண்ணைக்கு அருகில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. அதில் யானை, ஒட்டகச்சிவிங்கி, புலி சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வனவிலங்குகளின் மார்பளவு சிலையுடன் கூடிய மர இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, பலவிதமான பூச்செடிகள், பறவைகள், வனவிலங்குகளின் உருவங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கைபுல்தரை மற்றும் மான்,வரையாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு ஓவியம் சுவற்றில் வரையப்பட்டு உள்ளது.
புதுப்பொலிவு பெறுகிறது
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள்உற்சாகத்தோடு முதலைப்பண்ணைக்கு வந்து முதலைகளை பார்வையிட்டும், ஆங்காங்கே அமர்ந்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும் வருகின்றனர். அதோடு குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் மகிழ்ச்சியாக விளையாடி வருகின்றனர். வனத்துறையினரின் முயற்சியால் முதலைப்பண்ணை புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதனால் அங்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.
ஒற்றை யானை
இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை உணவைத் தேடிச்சென்றபோது எதிர்பாராதவிதமாக முதலை பண்ணையின்தெற்குப்பகுதியில் உள்ள காம்பவுண்டு சுவரில் மோதிவிட்டதாக தெரிகிறது. இதில் சுவர் சேதமடைந்தது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் முதலை பண்ணையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சேதமடைந்த சுவரை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story